ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான்..! வாய்ப்பில்ல ராஜா…! – சீமான்
விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார் என சீமான் பேட்டி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், எச்.ராஜா தமிழ் தேசிய புளியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும், திருமாவளவன் தமிழ் தேசியம் தோல்வியடைந்த ஒன்று, அது என்றைக்குமே வெற்றி பெறாது என தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான், வாய்ப்பில்லை ராஜா. அண்ணன் திருமாவளவனுக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய சித்தாந்தம் இப்பொழுது தான் வருகிறது. காத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
டிஐஜி விஜயகுமார் ஆறு மாத விடுமுறை கேட்ட போது, அவருக்கு கொடுக்கப்படவில்லை. விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 தருவோம் என கூறிவிட்டு தற்போது விதிகளை வகுப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.