காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை அனைவருமே, காந்தியடிகளை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் நினைவிடத்தில், குடியரசு தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதள பக்கத்தில், காந்தியடிகள் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ், வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தி அன்றாட வாழ்க்கையில் நமது கடமைகளை மையமாக வைத்து செயல்பட வலியுறுத்தினார். அரசியலமைப்பு அடிப்படைக் கடமைகள் மீதான நமது நேர்மையான அர்ப்பணிப்பே தேசத் தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.