இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கம்தான் பொது சிவில் சட்டம் – காங். எம்.பி கார்த்தி சிதம்பரம்

karthick chidamparam

இந்திய நாட்டை மதரீதியாக பிரிப்பதற்கான ஒரு முன் வடிவம் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பொது சிவில் சட்டம் என கார்த்திக் சிதம்பரம் பேட்டி. 

நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தை ஆதரித்துஉரையாற்றி இருந்தார். பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு வாக்கு வங்கி அரசியல் செய்வதாகக் கூறி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து சிவகங்கையில் காங். எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்திய நாட்டை மதரீதியாக பிரிப்பதற்கான ஒரு முன் வடிவம் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பொது சிவில் சட்டம். இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கம்தான் பொது சிவில் சட்டம். பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல; அப்படி கொண்டு வந்தால் சமுதாயம் மேலும் பிளவுபடும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்