தமிழக முன்னாள் தலைமை செயலாளர் காலமானார்..!
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் காலமானார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான பி.சபாநாயகம் (101) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
1945 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். அதன்பின் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளராக 1971 ஏப்ரல் 7 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். இதன்மூலம் தமிழக அரசின் 18 – வது தலைமை செயலாளர் ஆனார். 1971 – 1976 ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த அவர், 1976 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.