கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு 4,714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் நீதிபதி…!

chandru

கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக  வழங்கியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நினைவை போற்றக்கூடிய வகையில், மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 114 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் 6 தளங்கள் கொண்ட நூலகமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த நூலகத்தில் 6 தளங்களிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் வரும் 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.  இந்த நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக  வழங்கியுள்ளார். நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கிய புத்தகத்தில், 2,492 ஆங்கில புத்தகங்கள் மற்றும் 2,222 தமிழ் புத்தகங்களை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்