ஒவ்வொரு எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு
எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.
நேற்று மற்றும் இன்று என இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடையபேரு வரும் நிலையில், இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமலாக்கத்துறை மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்கிறது.
எதிர்க்கட்சிகள் இடையே பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது அவசியம். பாட்னாகூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என குற்றம் சாட்டியுள்ளார்.