சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம் – கனிமொழி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது. நமக்கும் சனாதன ஒட்டுண்ணிகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்றுப்போருக்கு நம் ஆயுதத்தைக் கூர்தீட்டுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது.
நமக்கும் சனாதன ஒட்டுண்ணிகளுக்கும் இடையில் தொடரும்…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 31, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025