கடற்கரையிலே மீன் விற்க கூடாது..! ஆனா கடலுக்குள்ள பேனா வைக்கலாமா…? – சீமான்
கடற்கரை ஓரத்தில் மீன் சந்தை போடக்கூடாது. ஆனால், கடலுக்குள் பேனா வைக்கலாமா? என சீமான் கேள்வி.
சென்னை மெரினா லூப் சாலையில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சீமான் பேட்டி
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், இங்கு மீன்கடைகள் போடுபவர்கள் நிரந்தர கட்டடம் கட்டி போடவில்லை. அதிகபட்சமாக ஒரு கூடைக்கு கீழ் தான் உட்கார்ந்து வியாபாரம் செய்கின்றனர். இதை காலி பண்ண வேண்டிய அவசியம் என்ன?
கடற்கரை ஓரத்தில் மீன் சந்தை போடக்கூடாது. ஆனால், கடலுக்குள் பேனா வைக்கலாமா? எனக் கேட்டால் உங்களிடம் பதில் உள்ளதா? சமாதி கட்டுவதில் காட்டும் வேகத்தை, ஏன் சந்தை கட்டுவதில் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.