ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆலோசனை
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஏற்க வேண்டும் என்றும், இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி தொடர்பாகவும், பராமரிப்பு பணிகளை அரசே மேற்கொள்ள இருப்பது தொடர்பாகவும் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.