முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்..!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வரும் 6ம் தேதி பர்கூர் ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் ஊராட்சியில் உள்ள 35 குக்கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள், நான்காயிரம் லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் என்று சுமார் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பர்கூர் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடுகளை வனப் பகுதிகளில் மேய்ச்சல் செய்வதும், விவசாயம் செய்வதும் ஆகும். மேலும், வனப் பகுதிகளில் விளையக்கூடிய நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் முதலானவற்றை அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வனக் குழுவின் மூலமாக, வனப் பகுதிக்குச் சென்று சேகரித்து வந்து அவைகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் விடியா திமுக அரசு, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் வனப் பகுதிகளில்அந்தியூர் தாலுகா, பர்கூர் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசை கண்டித்தும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையிலான இத்திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அந்தியூர் தொகுதி, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
6.7.2023 – வியாழக் கிழமை. pic.twitter.com/hzrtCQeTUQ
— AIADMK (@AIADMKOfficial) July 4, 2023