கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க முடிவு..!

tamilnadu government

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெரும் தொழிலார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant), சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு. தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.

இதற்கென ஆண்டுக்கு 60 இலட்சம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 1.80 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தினால் சுமார் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

construction

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்