மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது. இதற்காக பிரமாண்ட செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், பொதுக்களின் வசாதகிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கென உணவு வசதிகளும் சிறப்பான முரையில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்களுக்கு கொடுப்பதற்காக டன் கணக்கில் மீதமிருந்தது. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள், மதுரை மாநாடு வெற்றியை குறை சொல்ல முடியாததால் புளியோதரை தோல்வியை குறை சொல்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மதுரை அதிமுக மாநாடு வெற்றியடைந்துள்ளது. 15 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. மாநாடு பற்றி யாரும் குறை சொல்லவில்லை, புளியோதரை பற்றி குறை சொல்கின்றனர். மிச்சமான உணவுதான் கீழே கொட்டப்பட்டது, அதை மிகைப்படுத்துவதா? உணவு மிச்சமானதை ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 1 லட்சத்து 10 கிலோவிற்கு மேல் உணவு சமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…