சாமானிய மக்களின் குரல் ஜனநாயகத்தின் கோயிலில் மீண்டும் ஒலிக்கும் – மல்லிகார்ஜுனே கார்கே
உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறோம்; சாமானிய மக்களின் குரல் ஜனநாயகத்தின் கோயிலில் மீண்டும் ஒலிக்கும். உண்மை மற்றும் தைரியத்தின் சின்னமாக மாறியுள்ளார் ராகுல் காந்தி. இது வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி; ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அரசியல் சதித்திட்டம் வெளிப்பட்டுவிட்டது என பதிவிட்டுள்ளார்.
सत्यमेव जयते !
सुप्रीम कोर्ट के फैसले का तहे दिल से स्वागत।
संविधान, लोकतंत्र और भारत के आम लोगों की जीत हुई।
वायनाड के नागरिकों की जीत हुई।
श्री @RahulGandhi के ख़िलाफ़ BJP की साज़िश बेनकाब हुई।
लोकतंत्र के मंदिर में फिर गूंजेगी आम जन की बुलंद आवाज़।
सत्य और साहस के प्रतीक…
— Mallikarjun Kharge (@kharge) August 4, 2023