தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் எங்களை வளர்த்துள்ளார் – அமைச்சர் உதயநிதி
யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, மாமன்னன் திரைப்படம் தொடர்பான இயக்குநர் பா.ரஞ்சித்தின் விமர்சனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ளேன். தவறு எங்கு நடந்தாலும் தவறுதான். தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் எங்களை வளர்த்துள்ளார்.