முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரம் வந்து பாவத்தை போக்கி கொள்ள வேண்டும் – அண்ணாமலை
ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், முதல்வர் குடும்பத்தின் செல்வத்தை பெருக்குவதிலும், ஊழல் நிறைந்த திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது என அண்ணாமலை ட்வீட்.
திமுக இளைஞரணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது ‘பாத யாத்திரை’ அல்ல; குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடக்கும்
கொடூரத்திற்கும் மன்னிப்பு கேட்கும் ‘பாவ யாத்திரை’ என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்மன்என்மக்கள் பாதயாத்திரையை நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், முதல்வர் குடும்பத்தின் செல்வத்தை பெருக்குவதிலும், ஊழல் நிறைந்த திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.
எவரேனும் மூழ்கி, செய்த பாவங்களை போக்க வேண்டும் என்றால், அது முதலில் திமுக குடும்பமாக தான் இருக்க வேண்டும். மத்தியில் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர்.
பரிகாரம் வேண்டி பல பாவங்கள் இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பணிவுடன் வேண்டுகிறோம். அன்புடன் ராமேஸ்வரத்திற்குச் செல்லவும், பவயாத்திரை செய்யவும், புனித நீராடவும், தமிழ் மக்களை உங்கள் குடும்பத்தின் செல்வ வளர்ச்சிக்கு பயன்படுத்தியதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கவும்.’ என பதிவிட்டுள்ளார்.
We understand that the #EnMannEnMakkal PadaYatra flagged off by our Hon Home Minister Thiru @AmitShah avl yesterday in the holy land of Rameswaram has rattled TN CM @mkstalin avl so much that he has already begun whine about it & call it a PavaYatra.
With plenty of poll…
— K.Annamalai (@annamalai_k) July 29, 2023