இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைஞானி இளையராஜா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அமைச்சர் பொன்முடி, நேரு ஆகியோர் உடனிருந்தனர்.