கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அனைத்து கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திவுள்ளனர்.
இந்த குழுவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, அதிமுக எம்.பி., தம்பிதுரை, மதிமுக எம்.பி., வைகோ, வி.சி.க எம்.பி., திருமாவளவன், பாமக எம்.பி., அன்புமணி உள்ளிட்ட 12 பேர் குழுவில் உள்ளனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…