#Breaking : மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்…!
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.
மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், ஜூன் 15 வரை எந்தவித போராட்டமும் இல்லை என்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.