#BREAKING : இலங்கை அரசு டி.வி-யை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்..!

Published by
லீனா

இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர்.

இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக  இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார் என சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கையில்,அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில், இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர். இது போராட்டக்காரர்களின் வசம் சென்ற நிலையில் ரூபாவாகினி டிவியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago