#BREAKING : ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman

ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி  வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி  வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் சேவை வழங்கினால் ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புற்று நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், செயற்கை ஜரிகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட இனி 5% ஆக குறைக்கப்படும் என்றும், கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்