#Breaking : மணிப்பூர் விவகாரம் – இரண்டாவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு..!
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தொடர் வன்முறை நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உடனடியாக பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முதல் நாளே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில், இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் இரண்டாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.