திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது – மம்தா
திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மம்தா பானர்ஜி ட்வீட்.
இன்று காலை 8 மணி முதல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.’ என தெரிவித்துள்ளார்.
I condemn the political vendetta by BJP against DMK @arivalayam today. Misuse of central agencies continues. ED raids in Tamil Nadu at office of Minister for Prohibition and Excise at the state secretariat and his official residence are unacceptable. Desperate acts by BJP.
— Mamata Banerjee (@MamataOfficial) June 13, 2023