தென்னிந்திய பிரதிநிதியாக பிரதமரை வரவேற்க பழனிசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில்,பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கூட்ட அரங்கிற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிபூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தென்னிந்திய பிரதிநிதியாக பிரதமரை வரவேற்க பழனிசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டத்தில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…