நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Defense Minister Rajnath Singh, who paid his respects in Delhi on the occasion of Kargil War Victory Day, addressed the Kargil Victory Day ceremony.

Rajnath Singh

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் மரியாதை செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கார்கில் வெற்றி தினம் விழாவில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்; தேசத்திற்கு தேவை எழும்போது, இந்திய ராணுவத்திற்கு உதவி செய்ய, மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அண்மை காலமாக போர்கள் நீடித்துவரும் நிலையில், ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.