தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது – கே.பாலகிருஷ்ணன்

K Balakrishnan

தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே தொடர் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என  அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது. மக்கள் விரோத பாஜக ஒன்றிய ஆட்சிக்கு முடிவுகட்டும் பணியை ‘இந்தியா’ கூட்டணியும், தமிழ்நாட்டில் செயல்படும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் வெற்றிகரமாக முடித்துக்‌ காட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்