பீகாரில் ஒரு மிக பெரிய பாலத்தை அந்த மாநில அரசே இடித்து தள்ளி விட்டது – நாராயணன் திருப்பதி

narayanan

தமிழகத்தில் உள்ள சில தி மு க வினர் மற்றும் இடது சாரிகள் அந்த பாலம் மத்திய அரசின் திட்டம் என்று பொய் சொல்லி வருகின்றனர் என நாராயணன் திருப்பதி  ட்வீட். 

பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம்  கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பீகாரில் கங்கை நதியின் மேல் ரூ.1750 கோடி செலவில் மாநில அரசு கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மிக பெரிய பாலத்தை அந்த மாநில அரசே இடித்து தள்ளி விட்டது. பெரும் ஊழலால், அந்த பாலம் அபாயகரமான நிலையில் இருந்ததால், வேறு வழியின்றி அந்த பாலத்தை இடித்து தள்ளிய நிலையில், தமிழகத்தில் உள்ள சில தி மு க வினர் மற்றும் இடது சாரிகள் அந்த பாலம் மத்திய அரசின் திட்டம் என்று பொய் சொல்லி வருகின்றனர். தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினரின் ஆட்சி பீகாரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்