Chhattisgarh Election : 5900 கற்பழிப்பு வழக்குகள்.. சத்தீஸ்கரில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.! அமித்ஷா பகீர் குற்றசாட்டு.!

Union Minister Amit shah

வரும் டிசம்பர் மாதம் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் , அங்கு தேர்தல் வேலைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இன்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒரே நாளில் சத்தீஷ்கரில் வெவ்வேறு அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வந்து ராய்பூரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் பாஜக தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை அடுத்து அவர் அரசியல் கூட்டத்தில் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டினார்.

அவர் பேசுகையில், சத்தீஸ்கரில் மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகள் அதிகரித்துள்ளன. இதனால் சத்தீஸ்கரில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் 5900க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஆளும் காங்கிரஸ் ஆட்சி பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்