10 மணி ஆகிட்டு போதும்..! ஏஆர் ரஹ்மானின் கச்சேரியை தடுத்து நிறுத்திய போலீசார்…

மகாராஷ்டிரா: புனே நகரின் கச்சேரி மேடையில், பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை பாடவிடாமல் புனே காவல்துறை தடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புனேவில் நேற்றிரவு லைட்மேன்களுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்தினார். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல், அதாவது 10 மணியைத் தாண்டி நிகழ்வு தொடர்ந்ததையடுத்து, மேடையிலேறிய புனே காவல்துறை அவரை பாடவிடாமல் தடுத்தனர். பாடலை பாதியில் நிறுத்திய அவர் வெளியேறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

புனேவில் உள்ள ராஜா பகதூர் மில்ஸில் நேற்றிரவு நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் இந்த நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் குவிந்தனர். மேலும், இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.