சித்ராவின் மரணம் தொடர்பாக கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை.!

சித்ராவின் மரணம் தொடர்பாக கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை.!

Default Image

சித்ராவின் மரணம் தொடர்பாக ஓட்டலில் அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சித்ரா ,தனது சீரியலின் படப்பிடிப்பிற்காக வருங்கால கணவரான ஹேமந்த் ரவியுடன் உடன் சென்னை அருகிலுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஓட்டலின் அறையில் தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அதனை தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாவதாக சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த ஹேமந்துடன் நடத்திய விசாரணையில் அவரும் ,சித்ராவும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், படப்பிடிப்பு முடித்து விட்டு நள்ளிரவு அறைக்கு வந்த அவர் குளிக்க செல்வதாக கூறி விட்டு தன்னை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் ,வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து திறந்த போது தூக்கில் தொங்கியப்படி கண்டதாகவும் கூறியுள்ளார் .

மேலும் சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் அவரது தம்பி ஆகியோரிடமும் நாசரேத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து அவரது மரணம் கொலையா ?தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Join our channel google news Youtube