தமிழக அரசின் நீட் பயிற்சி – பாமக வரவேற்பு

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

      அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

      இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நீட் பயிற்சி வகுப்புகள் தாமதமாக தொடங்கினாலும், மேம்படுத்தபட்டிருப்பதை வரவேற்பதாகவும்,அதே நேரத்தில் பயிற்சிகளை இன்னும் அதிக நாட்கள் நீட்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment