6வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி.! எந்தெந்த ஊர்கள் செல்கிறார்.?

PM Modi : தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தேதியான ஏப்ரல் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தமாக 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதமர் நரேந்திர மோடி இந்தாண்டு 5 முறை தமிழகம் பயணம் செய்துவிட்டார். சென்னை, திருப்பூர், திருச்சி, மதுரை , ராமேஸ்வரம், தூத்துக்குடி , நெல்லை ஆகிய பலவேறு பகுதிகளுக்கு சென்று நலத்திட்டங்கள் தொடங்கும் விழா, தேர்தல் பிரச்சாரங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதனை அடுத்து, வரும் ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 6வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.