முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை ! முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை  முதலில் பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னரும் தீவிரம் குறையாத நிலையில் 2-ஆம் கட்டமாக ஊரடங்கு மே 3-ஆம்  தேதி நீட்டிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு மூன்றாம்கட்டமாக நீட்டிக்கப்பட்டது.    

இதற்குஇடையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஊரடங்கு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பதா ? வேண்டாமா ? என்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.