தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் – கையெடுத்துக் கும்பிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!

தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் – கையெடுத்துக் கும்பிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!

Default Image

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் பிறந்தநாளுக்காக நேற்று பூங்கொத்து வாங்க வெளியில் சென்றிருந்த அவரது காதலியை ரசிகர்கள் பின் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு ரியா அங்கிருந்த சென்றுள்ளார்.

பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததை அடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி அவர்கள் மீது நடிகர் சுஷாந்தின் குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருந்தார். தற்பொழுது வரையிலும் முடிவுக்கு வராத சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணையில் போதைமருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த றிய சில வாரம் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இந்நிலையில் இன்று சாம்சங்கின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் சுஷாந்த் சிங் பற்றிய ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருவதுடன் அவருக்கு ரசிகர்கள் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சாலையோரத்தில் உள்ள பூக்கடையில் பூக்கொத்து வாங்குவதற்காக காரில் வந்த சுஷாந்தின் காதலி இறங்கியுள்ளார். மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்து இருந்தாலும் அவரை அடையாளம் கண்ட சில ரசிகர்கள் அவரிடம் ஓடி சென்று பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து தனது கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என ரியா கூறியதுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

Join our channel google news Youtube