கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம்!

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம்.

கேரளாவில், துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானமானது, தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில், விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), கடந்த ஆண்டு ஜூலை மாதம்,கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடுபாதை தொடர்பான பாதுகாப்பு குறித்து எச்சரித்திருந்தது.

இன்னிலையில், கோழிக்கோடு விமான விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கருப்பு பெட்டி குறித்து ஆய்வு செய்யப்படும் அதே நேரத்தில், விமான நிலைய அதிகாரிகள் இப்போது விமான நிலையத்தின் டேப்லொப் ஓடுபாதையை விரிவாக்கும் திட்டத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.