விடாமுயற்சி படத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன்,  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், படத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் படம் குறித்தும் அப்டேட்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் இணைந்துள்ளது தான். படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு படக்குழு சென்றுள்ள நிலையில், அங்கு அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

முன்னதாக அஜர்பைஜான் நாட்டில் ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக தற்போது அந்த ரசிகருடன் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி கொண்டு வருகிறது. இதன் மூலம் அர்ஜுன் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

VidaaMuyarachi Arjun
VidaaMuyarachi Arjun Chrissuccess

வைரலாகி வரும் புகைப்படத்தில் அர்ஜுன் கெட்டப் மிகவும் மிரட்டலாக இருக்கிறது. கெட்டப் பார்த்துவிட்டு பலரும் இது தான் விடாமுயற்சி கெட்டப் என்று கூறி வருகிறார்கள். அஜித்துடன் அர்ஜுன் இரண்டாவது முறையாக நடிக்கிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.