4 ஆம் கட்ட ஊரடங்கு 3 நாட்களில் முடிவடைகிறது – வரும் 31 ல் பிரதமர் மன் கீ பாத்தில் அடுத்தகட்ட அறிவிப்பு!

வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள 4 ஆம் கட்ட ஊரடங்கு, மன் கீ பாத்தில் வருகின்ற 31 ஆம் தேதி பிரதமர் அடுத்தகட்ட அறிவிப்பு. 

உலகம் முழுவதும் தொடர்ச்சியாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது 1.58 லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்பொழுது வரை 4 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 4 ஆம் கட்ட ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 

ஆனால், கொரோனா இன்னும் குறையாததால் அடுத்தகட்டமாக ஊரடங்கை பிறப்பிக்க ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகள் என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சில இடங்களில் மிகவும் அதிகமான கொரோனா பாதிப்பு இருப்பதால் அதிகம் உள்ள இடங்களுக்கும் குறைவாக உள்ள இடங்களுக்கும் வித்தியசமான சில தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வருகின்ற 31 ஆம் தேதி மான்கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிடவுள்ளார். 

author avatar
Rebekal