தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட் உள்பட 13 வகைதொழிற்சாலைகள் இயங்க அனுமதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, மளிகை பொருட்கள் போன்றவை திறந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதையெடுத்து  இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, சர்க்கரை, உருக்கு ,சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், கண்ணாடி, தோல் பதனிடுதல், பேப்பர், டயர் ஆகிய தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஆலைகளை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த ஆலைகளை குறைவான தொழிலாளர்களை கொண்டு  இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

author avatar
murugan