கோழிக்குஞ்சு ,முட்டைகள் வாங்க அனுமதி வேண்டும் -தமிழக கால்நடைத்துறை..!

பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள் ,முட்டைகள் ,  தீவனம் ஆகியவை  வாங்க உரிய அனுமதி பெற வேண்டும் என  தமிழக கால்நடைத்துறை கூறியுள்ளது.உரிய அரசு அலுவலர்களும் முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் முட்டை உற்பத்தியாளர்கள் , ஒருங்கிணைப்புக்குழு , கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்திற்கும் , பல்லடம் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவினரிடமும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையெடுத்து அனைத்து கோழிப்பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளும் தமிழக அரசு கூறியுள்ளது.  பறவை காய்ச்சல் அச்சுறுத்தல்  காரணமாக கேரளாவில் இருந்து வரும் இறைச்சி கோழி திருப்பி அனுப்படுகிறது.

author avatar
murugan