கறி குழம்பு சுவையில் பட்டாணி குருமா செய்யலாமா ?

பட்டாணி குருமா -பயிறு வகைகளில் பட்டாணி ஒரு தனி இடம் பிடித்துள்ளது எனலாம். பட்டாணி இரண்டு வகையில் உள்ளது. ஒன்று பச்சை பட்டாணி மற்றொன்று பச்சை பட்டாணி பதப்படுத்தி கிடைக்கக் கூடிய உலர்ந்த பட்டாணி. இந்த பட்டாணி சமையலில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாலட் வகைகள் அவியல், பிரியாணி, குருமா என்று  செய்து ருசித்திருப்போம் .  அசைவ சுவையில் குருமா  எவ்வாறு செய்வது என பதிவில்  பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 • பட்டாணி =250 கி
 • தேங்காய் =1 கப்
 • சின்ன வெங்காயம் =10
 • பெரியவெங்காயம் =1
 • தக்காளி =2
 • சீரகம் =1ஸ்பூன்
 • மிளகு =1/2 ஸ்பூன்
 • சோம்பு =1 ஸ்பூன்
 • பட்டை ,கிராம்பு
 • சிக்கன் மசாலா =2 ஸ்பூன்
 • கரம் மசாலா =1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் =4
 • பூண்டு =5 பள்ளு
 • எண்ணெய் =தேவையான அளவு
 • உருளைக்கிழங்கு =4

செய்முறை:

பட்டாணியை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பச்சை பட்டாணியாக இருந்தால் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். இந்த குருமாவை குக்கரில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அரைக்க தேவையான பொருளான சீரகம் சோம்பு, மிளகு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ,வர மிளகாய் ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய  பிறகு அதிலே தேங்காய் ஒரு மூடி சேர்த்து அதிலே வறுத்து வைத்துள்ள சீரகம் சோம்பு போன்ற பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம்  சேர்த்து வதக்கி அதிலே மசாலா பொடி மற்றும்  பட்டாணியும் உருளைக்கிழங்கையும் சேர்க்க வேண்டும் ஐந்து நிமிடம் அதிலே வதக்கிய பிறகு நாம் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும். சுவையான காரசாரமான பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை நாம் சாதம் மற்றும் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக சேர்த்து சாப்பிடலாம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

பட்டாணியில் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது அது மட்டுமல்லாமல் போலைட் கால்சியம் ,மெக்னீசியம், சிங் ,பொட்டாசியம் அயன் போன்ற தாது சத்துக்களையும் கொண்டுள்ளது.

பயன்கள்:

 • நோய்கள் நாள்பட்ட நோயாக சேரவிடாமல் தடுக்கிறது.உடல் எடை குறைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த உணவு தேர்வாகும் .
 • ஒரு சிலருக்கு காய்கறிகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி காய்கறிகள் சாப்பிடாவிட்டால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் செல்லாமல் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. இந்த சத்து குறைபாட்டை நிறைவாக்க  பட்டாணியை  நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஏனென்றால் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வழிவடையச் செய்கிறது.
 • அல்சர் உள்ளவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த உணவாக உள்ளது. பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் அல்சர் குறைய வாய்ப்பு உள்ளது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன
 • இதில் உள்ள கரோட்டினாய்டு  கண் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
 • இதில் உள்ள புரதச்சத்து தசைகளுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது இதனால் தான் அங்கன்வாடி மையங்களில் இன்றும்  குழந்தைகளுக்கு பட்டாணி இணை உணவாக வழங்கப்படுகிறது.

ஆகவே பட்டாணியை நாம் தினமும் வேகவைத்து அல்லது வேறு ஏதேனும்  வகையிலோ சேர்த்துக்கொண்டு அதன் பலனை பெறுவோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.