உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை பாலோ பண்ணுங்க!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை பாலோ பண்ணுங்க!

Default Image

நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளை கைக்கொள்வது உண்டு. ஆனால் அவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில், பக்க விளைவை ஏற்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

மனதை லேசாக்குதல் 

நமது மனது சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம் சரியாக காணப்படும். நமது மனதை பொறுத்து தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும்.  மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால், நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம்.  

தியானம் 

முதலில் நமது வாழ்க்கையில் அமைதி என்பது எல்லாருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தியானத்துக்கு நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும், பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தை கவனிக்கலாம்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நாம் தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விடுவோம். 

 உணவு

உணவு என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. நாம் உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உணவு தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் உணவு உண்ணும்போது டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறை அல்ல. தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு பலத்தை தரும்.

Join our channel google news Youtube