கடந்து வந்த பாதை டாஸ்க் : ‘காலையில் பேப்பர் போட போவேன்’…கதறி அழும் கூல் சுரேஷ்!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பெரிய அளவில் சண்டைகள் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. தினம் தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. தினம் தினம் புது புது டாஸ்குகளை போட்டியளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக் 17) பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பற்றி பேசவேண்டும் என்ற டாஸ்கை கொடுத்துள்ளார்.

காமெடி என்ற பெயரில் என்ன பண்றீங்க? ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்!

வழக்கமாக எல்லாம் பிக் பாஸ் சீசன்களிலும் இது போன்ற ஒரு டாஸ்க் வரும் அந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் கண்கலங்கி கொண்டு மிகவும் வருத்தத்துடன் பேசுவார்கள். அதைப்போலவே, இந்த சீசனிலும் அனைத்து போட்டியாளர்களும் கண்ணீருடன் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பற்றி பேசுகிறார்கள்.

குறிப்பா இன்று வெளியான ப்ரோமோவில் ” யுகேந்திரன், அக்ஷய் உதயகுமார், விஜய், கூல் சுரேஷ் ஆகியோர் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பேசுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கூல் சுரேஷ் பேசும்போது மிகவும் கண்கலங்கி கொண்டே நான் சிறிய வயதில் 8-வது படிக்கும்போது வீடு விடாக சென்று காலையில் பேப்பர் போடுவேன் என தெரிவித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு ‘பிக் பாஸ்’ போறேன் வழிய விடு! மாஸ் என்ட்ரி கொடுக்கும் கூல் சுரேஷ்!

இவர் பேசியதை பார்த்த பிரதீப் கண்கலங்கியும் இருக்கிறார்.  முழுவதுமாக அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்பது இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் தான் தெரியவரும். மேலும் கூல் சுரேஷ் சினிமா துறையில் ஒரு காலத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மிகவும் சோகத்தில் இருந்தார்.

பிறகு சிம்புவின் மாநாடு படம் வெளியான சமயத்தில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக “சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியை விடு” என்ற வசனத்தை பேசி யூடியூபில் பிரபலமான. அதற்கு பிறகு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியான சமயத்தில் “வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்ற வசனத்தை பேசி இன்னும் பிரபலமானார். இதற்கு பிறகு பல படங்களில் தங்களுடைய படங்களை ப்ரோமோஷன் செய்யவே இவரை அந்த படக்குழுவினர் அழைத்து சென்றார்கள்.

ரொம்ப சாதாரண ஆளு சார்! ‘பிக் பாஸ்’ மேடையில் கண்ணீர் வடித்த கூல் சுரேஷ்…தட்டி கொடுத்த கமல்!

இருப்பினும் படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில் இருக்கிறாராம். இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொது கூட கண்கலங்கி தனக்கு கிடைத்த மிகப்பெரிய மேடை இது என கண்கலங்கி பேசினார். எனவே, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றவுடன் படங்களில் நடிக்க வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.