இறந்தவருடன் ஒப்பிட்டு பேசியதால் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பார்வதி!

இறந்தவருடன் ஒப்பிட்டு பேசியதால் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பார்வதி!

Default Image

இறந்தவருடன் ஒப்பிட்டு பேசியதால் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து  நடிகை பார்வதி விலகியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்து மலையாள திரையுலகில் 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்தான் நடிகை பார்வதி. இவர் அதனைத் தொடர்ந்து பூ என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலையாள திரையுலகினர் 2008 ஆம் ஆண்டு 20 20 என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இதில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நடிகை பார்வதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை மலையாள நடிகர் சங்க செயலாளர் இடவேல பாபு என்பவர் வெளியிட்டுள்ளார். அப்பொழுது முதல் பாகத்தில் நடித்த பார்வதி, இரண்டாம் பாகத்திலும் நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. நடிகர் சங்கத்தில் அவர் இல்லை எனவும், இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும் என்றும் இடவேல பதிலளித்துள்ளார். இறந்தவருடன் ஒப்பிட்டு பேசியதால் ஆவேசமான பார்வதி நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Join our channel google news Youtube