சிறந்த கேப்டன் தோனி இல்லயா..? – பார்த்திவ் பட்டேல் அதிரடி!

 தோனி சிறந்த கேப்டனா அல்லது கங்குலி சிந்த கேப்டனா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் என்றால் தோனி கங்குலி என்று இருவரையும் கூறலாம், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுபேரும் இந்திய அணியை மீட்டனர், மேலும் இவர்கள் செய்த சாதனையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சில கிரிக்கெட் வீரர்கள் கூறிவருகிறார்கள்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரிடம் கங்குலி தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதற்கு பார்த்திவ் பட்டேல் கூறியது என்னை பொறுத்தவரை கங்குலி தான் சிறந்த கேப்டன்.

ஏனெனில் அவர் முதலிலிருந்தே இந்திய அணியை வலிமைப் படுத்தினார்.  பலம் இளம் வீரர்களை பயிற்சி செய்து வலிமை யாக்கினார், மேலும் தோனி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் அவரை போல் யாரும் கோப்பையை வென்று கொடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.