பாண்டியராஜனுக்கு இத்தனை மகன்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

பாண்டியராஜனுக்கு இத்தனை மகன்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Pandiarajan

அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாண்டியராஜன். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தூறல் நின்று போச்சு, மனைவி ரெடி,மீண்டும் மகான், பச்சைக்கொடி, ஊர் பஞ்சாயத்து, சுப்பிரமணிய சுவாமி, கில்லாடி மாப்பிள்ளை, நல்ல மனுசுக்காரன், வசீகரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்தார். ஹீரோ, காமெடியன், குணச்சித்ர கதாபாத்திரங்கள் எல்லா கதாபாத்திரங்களில் இவர் நடித்தவர்.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பாண்டியராஜன் பல படங்களை இயக்கி ஹிட் படத்தையும் கொடுத்து இருக்கிறார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கன்னி ராசி, ஆண் பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியும் இருக்கிறார்.

முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வளம் வந்து கொண்டு இருந்த போதே கடந்த 1986 -ஆம் ஆண்டு வாசுகி என்பவரை பாண்டியராஜன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரேம்ராஜன், பிருத்வி ராஜன், பல்லவராஜன் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

தளபதி 68 திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்நிலையில், பாண்டியராஜன் தனது மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. புகைப்படத்தில் பாண்டியராஜினின் மூன்று மகன்களும் நன்றாக வளர்ந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டியராஜனுக்கு இத்தனை மகன்களா? எனவும், பாண்டியராஜனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? எனவும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். மேலும் பாண்டியராஜன் கடைசியாக ஆதி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான பார்ட்னர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandiarajan Family
Pandiarajan Family / @Chrissuccess
Join our channel google news Youtube