சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்… விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இமரான் கான், சைபர் வழக்கில் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காகவும், மேலும் ஒரு சில வழக்கில் சிறையில் உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். இதன்பின் பாகிஸ்தானி பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு மீது பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது.

இதனால், இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதன்பின் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற நிலையில், பதவிக்காலம் முடிந்து தற்போது, பாகிஸ்தான் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது.

இதனிடையே, இம்ரான் கான் பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல், சைபர் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இதில் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

நீடிக்கும் போர் நிறுத்தம்… 30 பாலஸ்தீன கைதிகள், 12 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு.!

அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. எனவே, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்ட தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள்  கொண்ட அமர்வு நிறுத்தி வைத்தது.

இருப்பினும், அவர் முழுதாக விடுதலை செய்யப்படவில்லை. ஏனென்றால், பாகிஸ்தான் நாட்டின் ரகசியங்களை கசியவிட்டதாக ஏற்கனவே, அவர் மீது சைபர் வழக்கு பதியப்பட்டு அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், இம்ரான் கான் மீது சுமத்தப்பட்ட சைபர் வழக்கில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஊழல் தண்டனைக்கு பிறகு, தேர்தலில் போட்டியிட இம்ரான் கானுக்கு ஐந்தாண்டு தடை விவிதிக்கப்பட்டது, அவரது எம்பி பதவியும் பறிபோனது.

பிரதமர் மோடியின் ‘விக்சித் பாரத்’ யாத்திரை… அனைத்து அமைச்சர்களுக்கும் கண்டிப்பான உத்தரவு.!

சைபர் வழக்கு என்றும் அழைக்கப்படும் அரசு ரகசிய வழக்கின் விசாரணை சிறையில் நடைபெற்று வந்தது ஆனால் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இது சட்டவிரோதமானது என்று அறிவித்தது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறை வளாகத்தில், ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்படி, திறந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கானின் விசாரணை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும் என்று என்று தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சிறை வளாகத்திற்குள் விசாரணை நடத்தகோரிய அரசு சமர்ப்பித்த ஆவணங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமராக இருப்பதால் இதனால் புறக்கணிக்க முடியாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்