பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுவார்த்தை…!!

பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுவார்த்தை…!!

Default Image

பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு தற்போது கண்டனம் எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி_யுடன்  தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இருவரின் பேச்சு இந்தியாவின் ஒற்றுமை, நல்லிணக்கம், இறையாண்மை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதர் சோகைல் மகமூத்துக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து இந்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே கடும் கண்டனத்தைத் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Join our channel google news Youtube