பிக்பாசுக்கு அட்வைஸ் கொடுத்த …… திருமாவளவன்,கிருஷ்ணசாமி

கமல், பிக் பாஸ் நடிகர்கள் இந்த இடத்தில் 10 நாள்கள்இருங்கள்! திருமாவளவன் அட்வைஸ்”பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்ளிட்ட குழுவினர் சேரியில் வந்து 10 நாள்கள் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் சேரி மக்களின் அன்பு, அரவணைப்பு தெரியும். உங்க விளம்பரத்துக்காக சேரி மக்களை அசிங்கப்படுத்தாதீர்கள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விருது வென்ற பிக்பாஸ் குடும்பத்தார் : தமிழக அரசு அறிவித்துள்ள 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான சினிமா … Read more

கிரிக்கெட்: இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் சதம்

டெர்பி: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிதாலி ராஜ் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.மேலும் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்துக்கு 266 இலக்காக நிர்ணயித்துள்ளது.

கட்டிடத்தில் ஏறி தற்கொலை முயற்சி போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி.. சென்னையில் பரபரப்பு

சென்னை: ஊழலில் திளைத்துள்ள அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வங்கிக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் தற்கொலை போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமியை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அவரை கீழே இறக்கினர். ஜனாதிபதி தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டும், அதிமுக அரசை கலைக்க வேண்டும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குறளகம் அருகே உள்ள 4-ஆவது … Read more

அரசு இடத்தை ஆக்கிரமித்து நடிகர் திலீப் திரையரங்கம் கட்டியுள்ளதாக புகார்

திருவனந்தபுரம்: அரசு இடத்தை ஆக்கிரமித்து நடிகர் திலீப் திரையரங்கம் கட்டியுள்ளதாக புகார் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் அருகே சாலக்குடியில் ஒரே வளாகத்தில் 3 திரையரங்குகளையும் நடிகர் திலீப் கட்டியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்து மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் முறையே 1-2 , 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது தெ.ஆ. இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வென்றது. இதையடுத்து நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் பிடித்தது. … Read more

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் …….

புதுகோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்திடகோரி நெடுவாசல் உள்ளிட்ட 94 கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுகோட்டையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். 

கிரிக்கெட்: இந்தியா- நியூசிலாந்து போட்டி மழையால் பாதிப்பு

டெர்பி: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

தமிழக மீனவர்கள் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது ….கொக்கரிக்கும் ராஜபக்சே மகன்

கொழும்பு :இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவ ர்களுக்க எந்த உரிமையும் கிடையாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார். எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், துப்பாக்கியால் சுடுவதும், அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வருகிறது இலங்கை அரசு. இதனால், தமிழக மீனவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத் … Read more

காமராஜர் தி கிங் மேக்கர்…………!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார். நேருவின் ஆட்சியில் … Read more

உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவன் …………தோழர் சங்கரய்யா

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் தோழர் சங்கரய்யா! ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள்! கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு – ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் … Read more