இந்தியாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடந்த பாதிப்பு – மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு?

இந்தியாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, இதுவரை 158,086 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவின் தாக்கம் அதிகம் கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் 10 வது நாடக இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 50 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு சென்று கொண்டே  இருக்கிறது. 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை 158,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,534 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 7,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
Rebekal