ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் – முதல்வர் பழனிசாமி

ஆன்லைன் சூதாட்ட  தளங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் தான் அடக்கி ஆளுகிறது. இன்று  பொழுதுபோக்காக இணையதளம் தான் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர்.

இந்த விளையாட்டுக்களால் அவர்கள் பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் போது தனது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இதனால், முற்றிலுமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர் தான். இந்த உயிரிழப்புகளை தடுக்க, இந்த  ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  இதுகுறித்து போது பேசுகையில், ‘ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றும், ஆன்லைன் சூதாட்ட  தளங்கள் தடை செய்யப்படும் என்றும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர்  குற்றவாளிகளாக கருதப்படுவர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.