100 வாட் சார்ஜிங்..அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான OnePlus Nord CE 4!

OnePlus Nord CE4 Launch : அட்டகாசமான அம்சங்களை கொண்ட ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதனுடைய புது மாடலான ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு இதற்கு முந்தைய மாடலான நார்ட் சிஇ 3 லைட் அறிமுகம் செய்யப்பட்டு பலரும் வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இன்று ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஃபோன் இன்று அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே அதற்கான விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரம் தகவல்களாக வெளியாகி இந்த போனை வாங்குவதற்கான ஆர்வத்தை அதிகமாக்கி இருந்தது என்றே சொல்லவேண்டும். இதனையடுத்து, இந்த போன் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறது. அதனுடைய உண்மையான விலை மற்றும் அதனையுடைய சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரமாக பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள் 

  • இந்த ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ ஸ்மார்ட் ஃபோன் ஆனது 5 ஜி நெட்வெர்வ்ட் அம்சத்தை கொண்டு இருக்கிறது. எனவே, 5 போன் நல்ல பெட்ஜெட்டில் அதுவும் ஒன்பிளஸ் மாடலில் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
  • மேலும், இந்த போன் (Qualcomm Snapdragon 7 Gen 3 Chipset) இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்குகிறது. எனவே கேம்ஸ் விளையாடும் கேம் பிரியர்களுக்கு இந்த போன் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குவதன் காரணமாக கேம்ஸ் விளையாடும் போது ஹேங் பிரச்சனை இருக்காது.
  • இந்த போனில் மிகப்பெரிய சிறப்பு அம்சம் என்றால் போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் தான். ஏனென்றால், இந்த போன் 5500 mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. 100 வாட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் குறைந்தாலும் கூட விரைவாக நீங்கள் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
  • அதை போல, மற்றோரு அம்சம் போனின் டிஸ்பிளே தான். இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டு இருக்கிறது. எனவே படங்கள் பார்க்கும்போது ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.
  • கேமராவை பொறுத்தவரையில் பின்பக்க கேமரா 50 mp-ஐ கொண்டுள்ளது. பின் புறத்தில் 16mp கேமராவை கொண்டுள்ளது. அது மட்டுமின்றி 8 MP அல்ட்ராவைட் வசதியையும் கொண்டு இருக்கிறது. வீடியோவை பொறுத்தவரையில் 1080p 30fps தரத்தில் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

விலை எவ்வளவு? 

இப்படியான அசத்தலான அம்சங்களை கொண்ட இந்த ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) விலை விவரத்தை பற்றி பார்ப்போம். 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகத்தை கொண்டது ரூ. 24,999 இருக்கும். அதைபோல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பக அம்சத்தை கொண்டது ரூ.26,999 என்று கூறப்படுகிறது.  கண்டிப்பாக அசத்தலான பட்ஜெட்டில் போன் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள் தாராளமாக இந்த போனை வாங்கலாம். அந்த அளவிற்கு அசத்தலான அம்சத்தை இந்த போன் கொண்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.